இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை விடைபெறுவது தொடங்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்!

0 1653

இன்னும் 2 நாள்களில் தென்மேற்குப் பருவமழை விடைபெறுவது தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 19 வரை தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் 872.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடமேற்கு இந்தியா மற்றும் குஜராத் மாநிலம் கட்ச் பகுதிகளில் இருந்து 2 நாள்களில் தென்மேற்குப் பருவமழை நிறைவு பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments