எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்கள் படகுடன் சிறைபிடிப்பு..!

0 1194

எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை காரைநகர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை ரோந்துப்பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கடற்படை அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், தமிழக-யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதனிடையே, கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments