விபத்தில் மூளைச்சாவு அடைந்த 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்

0 2279
விபத்தில் மூளைச்சாவு அடைந்த 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த 26 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டு, இறந்தும், எழுவருக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி நம்பியம்பாளையம் அடுத்த நாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான நடராஜ், சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, நடராஜ் உடலில் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவை, 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டு பொருத்தப்பட்டன.

ஏழு பேர் மறுவாழ்வு பெற உதவியதன் மூலம், மறைந்தும், நடராஜ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments