முன்விரோதத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் மீது 8 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்

முன்விரோதத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் மீது 8 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் புத்தேரி பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக் என்ற மாணவன் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, 8 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த மாணவன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Comments