மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவர் கைது

0 1907
மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவர் கைது

மதுரை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 55 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஒருவரை கைது செய்து, பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோச்சடையை சேர்ந்த சைக்கிள் கடை உரிமையாளரான விருமாண்டி, பட்டப்படிப்பு படித்த தனது மகனுக்கு வேலை தேடிவதை அறிந்த பாலாஜி உள்ளிட்ட 6 பேர், உயர் நீதிமன்றத்தில் நீதிபதி உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பி, வீட்டை விற்று, பணம் கொடுத்த நிலையில், வாக்குறுதிபடி வேலை வாங்கி தராததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, விருமாண்டி அளித்த புகாரின்பேரில், பாலாஜியை போலீசார் கைது செய்தனர். பாலாஜியின் மனைவி மஞ்சுளா உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments