மது பாரில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்களும், உள்ளூர் இளைஞர்களும் மோதல்

0 2192
மது பாரில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்களும், உள்ளூர் இளைஞர்களும் மோதல்


புதுச்சேரியில் உள்ள மது பாரில் கேரளாவில் இருந்து சுற்றுலா வந்த இளைஞர்களும், உள்ளூர் இளைஞர்களும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா சாலை - செயின்ட் தெரசா வீதி சந்திப்பில் உள்ள தனியார் மதுக்கடையில் நேற்றிரவு கேரளாவைச் சேர்ந்த 5 பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அருகே முதலியார்பேட்டை சேர்ந்த 6 பேர் மது அருந்திய நிலையில், போதையில் இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மதுபாட்டில்களால் தாக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments