கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த 2 வயது ஆண் குழந்தை பலி.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 2 வயது ஆண் குழந்தை கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் - அகிலா தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை, பக்கத்து வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டிக்குள் தலைக்குப்புற விழுந்து மூர்ச்சையானதாக கூறி பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது. கட்டுமான பணி நடைபெற்று வருவதால் கீழ்நிலை தண்ணீர் தொட்டி திறந்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Comments