காவலாளியை கொன்று கால்களை கட்டி தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..! பேரூராட்சி அலுவலக திகில்.!

0 3013

ராசிபுரம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவுக் காவலாளி கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான பரமசிவம் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பரமசிவம் பணிக்கு சென்றுள்ளார். அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தும் செட்டில் கை கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் பரமசிவம் சடலமாக கிடந்ததை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கைகால்களை கட்டி தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்த காவலாளி பரமசிவத்தின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறனர். யாரால் ? எதற்காக பரமசிவம் கொலை செய்யப்பட்டிருப்பார் ?என்று போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

இதற்க்கிடையே பரமசிவத்தின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ராசிபுரம் ஆத்தூர் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்ததை ஏற்று மறியல் போரட்டம் கைவிடப்பட்டது. காவலாளி மர்மமான முறையில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments