வகுப்பில் செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்ததால் மாணவனை தாக்கிய ஆசிரியர்.. தற்காலிக பணி நீக்கம் செய்த நிர்வாகம்.!

0 3391

ஆந்திரமாநிலம் விஜயவாடாவில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை அடித்து, உதைத்த ஆசிரியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பென்ஸ் சர்கிள் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது மாணவன் ஒருவன் இயர் போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த மாணவனை கன்னத்தில் அறைந்தும், காலால் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளார். இதனை சக மாணவன் ஒருவன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைவளங்களில் பகிர்ந்துள்ளான்.

மாணவன் தாக்கப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஆசிரியரை பள்ளி நிர்வாகம் பணி இடை நீக்கம் செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments