காரில் செல்லப்பிராணியை கட்டி இழுத்து சென்ற மருத்துவர்.. வாகனத்தை நிறுத்தி உயிரைக் காப்பாற்றிய பொதுமக்கள்.!

0 4051

ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் கார் ஒன்றில் செல்லப்பிராணி ஒன்றை கட்டி இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜோத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த Rajneesh Galwa. என்பவர் அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று அவர் காரில் செல்லும் போது பின்னால் செல்லப்பிராணி ஒன்றை நீண்ட கயிற்றில் கட்டி இழுத்து சென்றுள்ளார்.

அதனை சாலையில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக காரை நிறுத்தி செல்லப்பிராணியை அவிழ்த்து விட்டுள்ளனர்.

பின்னர் காயம் அடைந்திருந்த செல்லபிராணியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் மீது விலங்குகள் தொண்டு அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments