இது போருக்கான காலம் அல்ல என்று ரஷ்ய அதிபர் புதினுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி.!

0 3090

இது போருக்கான காலம் அல்ல என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி நேருக்கு நேராகக் கூறியது உலகம் முழுவதும் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதற்கு சில மணி நேரம் முன்பு இந்தியா ரஷ்யாவுக்கு மேலும் ஒரு எதிர்வினை ஆற்றி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக ஐநா. பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நீடிக்கும் நிலையில் இந்தியா அமெரிக்கா-ரஷ்யா இடையே வெடித்த மோதலில் சார்பு எடுக்காமல் நடுநிலைக் கொள்கையில் உறுதியுடன் உள்ளது. ரஷ்யாவை விமர்சிப்பதிலும் இந்தியா மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments