பைக்கில் வந்த 2 இளைஞர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு.!

0 2135

பீகார் மாநிலம் பெகுசராயில் கடந்தவாரம் சாலையில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், வைஷாலி மாவட்டத்தில் இதேபோன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை குற்றவாளிகள் ஆயுதங்களை காட்டி மிரட்டியபடி, துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

தகவல் கிடைத்ததும், நகர காவல் துறையினர் குற்றவாளிகளைப் பின்தொடர்ந்தனர், ஆனால் பிடிக்க முடியவில்லை, இதையடுத்து போலீசார் நகரம் முழுவதும் சுற்றி வளைத்து சீல் வைத்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments