நடுவானில் நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து நொறுங்கிய இரண்டு விமானங்கள்.. 3 பேர் உயிரிழப்பு!

0 2569

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.

லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து நொறுங்கின.

விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments