மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது.!

0 2604

கோவையில் மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரத்தினபுரி பகுதியில் போலீசார் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்ட போது டாடாபாத் 9 வது வீதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தப்பி ஓட முயன்ற 3பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் 3பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் மருந்துக் கடை நடத்தி வரும் கரிகாலன் என்பவரிடம் டாக்டரின் அனுமதி சீட்டு இல்லாமல் போதை மாத்திரைகளை வாங்கி சக மாணவர்களுக்கு கொடுத்து இருப்பதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments