பெண் மீன் இல்லன்னா.. ஆண் மீன் செத்துருமாம்.. காதலிக்காக உயிரை விட்ட காதலன்..! “காதல்” சித்தப்பாக்களால் ஒரு விபரீதம்..!

0 4659
பெண் மீன் இல்லன்னா.. ஆண் மீன் செத்துருமாம்.. காதலிக்காக உயிரை விட்ட காதலன்..! “காதல்” சித்தப்பாக்களால் ஒரு விபரீதம்..!

ராணிப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த ஜோடிகளை போலீசார் பேருந்தில் ஏற்றி பெங்களூருக்கு அனுப்பி வைத்த நிலையில், நடுவழியில் பேருந்தை மறித்த பெண்ணின் உறவினர்கள் , காதலியை பிரித்து அழைத்துச்சென்றதால் விரக்தி அடைந்த காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீதம் அரங்கேறி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தண்டு மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். BE பட்டதாரியான் இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சக்திவேலுவுக்கும், அவருடன் பணிபுரிந்து வந்த புதுக்கோட்டை அடுத்த எழனுற்றிமங்களம் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது, இதனை அறிந்த தேன்மொழியின் பெற்றோர் தங்கள் பெண்ணை பணியில் இருந்து நிறுத்தினர். அதன் பிறகும் கடந்த 3 ஆண்டுகளாக அவர்களது காதல் தொடர்ந்து வந்துள்ளது

ஓராண்டிற்கு முன்பு கொரோனாவுக்கு தாய் தந்தையை பறிகொடுத்த சக்திவேல் தனது ஒரே தங்கை பவானிக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பொறுப்பாக திருமணம் நடத்தி வைத்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 தேதி வீட்டை விட்டு வெளியேறிய தேன்மொழி சக்திவேலுவை பதிவு திருமணம் செய்து கொண்டு சென்னை திருவொற்றியூரில் ஒன்றாக வசித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியினர் என்பதால் தேன்மொழியின் உறவினர்கள் வலைவீசி தேடியதால் அங்கிருந்து தப்பி ராணிப்பேட்டை சென்றனர். கடந்த 10ந்தேதி ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில் இருவரும் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்

புகாரை விசாரித்த வாலாஜாபேட்டை போலீசார், பெண்ணின் குடும்பத்தினருடன் சுமூக பேசி தீர்வு காணப்பட்டதாக கூறி நண்பர்களுடன் அனுப்பி வைத்தனர். அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இருவரையும் பெங்களூரு செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர் .

பேருந்து வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த சேர்காடு பகுதியில் சென்ற போது பேருந்தை காரில் வந்து மறித்த தேன் மொழியின் உறவினர்கள் சக்திவேலை தாக்கிவிட்டு தேன்மொழியை தங்களது காரில் கடத்திச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து பதறிப்போய் மீண்டும் ராணிப்பேட்டை மாவட்ட SP அலுவலகத்தில் சக்திவேல் புகார் அளித்தபோது அந்தப் பெண்ணை வழிமறித்து அழைத்துச் சென்ற இடம் வேலூர் மாவட்டம் திருவலம் என்பதால் திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்

திருவலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது ஏற்கனவே ராணிப்பேட்டை SP அலுவலகத்திலும் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திலும் விசாரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அங்கேயே சென்று புகார் அளிக்கும்படி சக்திவேலை திருப்பி அனுப்பினர்

வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது நீதிமன்றம் அணுகி மனைவியை காணவில்லை என ஆட்கொணர்வு மனு போடுமாறு திருப்பி அனுப்பி உள்ளனர். ஆறுதல் சொல்ல தாய் தந்தை இன்றி, ஆதரவிற்கு உறவுகள் இன்றி தவித்த சக்திவேல் கடந்த 13ஆம் தேதி எலிபேஸ்ட்டை சாப்பிட்ட நிலையில் 16 ஆம் தேதி இரவு உயிர் இழந்தார்.

சக்திவேலின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்ட நிலையில், இறப்பதற்கு முன்பு தனது டைரியில் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனைகளை விவரித்துள்ளார்.

i am quit என ஆரம்பித்து என்னை மன்னித்துவிடு.. இனி நம்மை யாராலும் பிரிக்க முடியாது என பேசிக்கொண்டு பேருந்தில் சென்ற போது உன் வீட்டு உன் விசுவாசிகள் இப்படி செய்வார்கள் என நான் ஒருபோதும் கனவில் கூட நினைக்கவில்லை . கையில் கிடைத்த பொருளை தொலைத்த பாவி ஆனேன், போலீசார் உதவவில்லை, நீ ஆசைப்பட்டபடி உன் புகைப்படம் என் வீட்டில் மாட்டி விட்டேன் அதுபோல் நீ ஆசைப்பட்டது போல் உன் கணவனாய் உயிர் நீக்கம் செய்கிறேன் என இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments