ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக நீடிக்கும் தடை.. பெண்கள் கல்வியை இழந்துள்ளது வெட்கக்கேடானது என ஐ.நா கண்டனம்..!

0 2848
ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக நீடிக்கும் தடை.. பெண்கள் கல்வியை இழந்துள்ளது வெட்கக்கேடானது என ஐ.நா கண்டனம்..!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், செப்டம்பர் 18-ம் தேதி முதல் ஆண்களுக்கான உயர்நிலைப்பள்ளிகளை மீண்டும் திறந்த நிலையில், மாணவிகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தனர்.

இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கல்வியை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா சபை, இது வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்குமாறும் தலிபான்களை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments