காதல் மனைவியை கடத்தி விட்டதாக புகாரளித்த கணவர்.. பெண்ணின் தாய் உள்ளிட்ட 10 பேரை தேடி வரும் போலீசார்..!

0 8096
காதல் மனைவியை கடத்தி விட்டதாக புகாரளித்த கணவர்.. பெண்ணின் தாய் உள்ளிட்ட 10 பேரை தேடி வரும் போலீசார்..!

காதல் மனைவியை கடத்தி விட்டதாக கணவர் அளித்த புகாரின்பேரில், பெண்ணின் தாயார் உள்ளிட்ட  10 பேரை போலீசார்  தேடி வருகின்றனர். 

சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர் முருகன்,  திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்த கோமதியை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி , சங்கரன்கோயில் அழைத்து  வந்து கடந்த 28ம் தேதி திருமணம் செய்தார்.

இந்தநிலையில் தனது மனைவியை காணவில்லை என்றும், அவருடைய உறவினர்கள் கடத்தி சென்றுவிட்டதாகவும் சங்கர் முருகன்  அளித்த புகாரின் பேரில் கோமதியின் தாயார் ராஜம்மாள், உள்ளிட்ட உறவினர்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments