இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி

0 6915
இரண்டாவது திருமணம் செய்த கணவனை மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி

தெலுங்கானாவில் இரண்டாவது திருமணம் செய்த கணவனை, மனைவி, மின் கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த சம்பவம், அரங்கேறி உள்ளது.

ஸ்வர்ணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர் 20 லட்சம் ரூபாய் வரதட்சணையுடன் அகிலா என்பவரை 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மனைவியை விட்டுப் பிரிந்த ஸ்ரீகாந்த், வாரங்கல் பகுதியில் வேறு ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து குடும்பம் நடத்தியதால், ஆத்திரமடைந்த அகிலா கணவர் ஸ்ரீகாந்தை மின்கம்பத்தில் கட்டிவைத்து செருப்பால் அடித்து செருப்பு மாலை அணிவித்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் ஸ்ரீகாந்த்தை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments