தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது.!

0 4129

சென்னை திருவொற்றியூரில் தனது வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தொட்டிகுப்பத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் செந்தில் குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுநராக பணிபுரிகிறார்.

தற்போது மருத்துவ விடுப்பில் இருக்கும் அவர், நேற்று முன் தினம் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய போது காரை வீட்டின் அருகே நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது அங்கு 4 பேர் மது அருந்தியதை செந்தில் குமார் தட்டிக் கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் காலி மதுபாட்டிலை கார் மீது வீசியதோடு கான்கிரீட் கல்லால் தலைமைக் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் காயமடைந்த செந்தில் குமார் அளித்த புகாரின் பேரில், ஜோசப், பிரபு, கந்தவேல் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments