ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபடாததால் தீயணைப்புத் துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் அருகே போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேரங்கியூரைச் சேர்ந்த சதீஷ், பரத் ஆகியோர் நேற்று மாலை பிடாகம் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது குறித்த தகவல் தெரிவித்தும், இரவு நேரமானாதால் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபடவில்லை.
இதனைக் கண்டித்து சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
2 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தேடும் பணியில் ஈடுபடுவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
Comments