தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை சட்டென மடக்கிப் பிடித்த போலீசார்.!

0 2569

சென்னை தாம்பரத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த திருடனை சட்டென மடக்கிப் பிடித்து போலீசார் கைவிலங்கிட்டனர்.

சென்னையில் திருடப்பட்ட ஷிப்ட் ரக கார் ஒன்று மதுரவாயில் சுங்க சாவடியை கடந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில், பெருங்களத்தூர் அருகே தடுப்புகள் அமைத்து தாம்பரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டி அவ்வழியாக வந்த காரை ஓட்டி வந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

கார் திருட்டில் ஈடுபட்டதோடு, தாம்பரம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் நகை திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 62 சவரன் தங்க நகைகளை மீட்டு 2 கார்கள், ஒரு பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments