தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.11,677 கோடி.. சில மணி நேரத்திற்குள் புத்திசாலிதனத்தால் ரூ.5 லட்சம் சம்பாதித்த இளைஞர்..!

0 33309

குஜராத்தைச் சேர்ந்த பங்கு வர்த்தகர் ஒருவரின் டிமேட் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட 11 ஆயிரத்து 677 கோடி ரூபாய் பணத்தில் 2 கோடி ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்து, தனது புத்திசாலிதனத்தால் சில மணி நேரத்திற்குள் 5 லட்சம் ரூபாய் லாபம் பார்த்துள்ளார்.

அகமதாபாத் சேர்ந்த ரமேஷ் சாகர், பங்கு வர்த்தகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். அவரது டிமேட் கணக்கில், கடந்த ஜூலை 26-ஆம் தேதி, 11 ஆயிரத்து 677 கோடி ரூபாய் வரவு செய்யப்படிருக்கிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தவறாக பணம் வரவு செய்யப்பட்ட தகவலை தெரிவித்து, அன்றைய இரவு மீண்டும் பணத்தை வங்கி திரும்ப பெற்று விட்டது. இடைப்பட்ட 8 மணி நேரத்தில், ரமேஷ் சாகர் தனது புத்திசாலிதனத்தால் 5 லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments