30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரிய திரையில் சினிமா பார்க்க வாய்ப்பு!

0 4298

முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் ஜம்மு காஷ்மீர் மக்கள் நவீனத் திரையரங்குகளில் திரைப்படம் பார்க்க உள்ளனர்.

ஸ்ரீநகரில் ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டுமானப் பணிகள் கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளன. பாலிவுட் திரைப்படங்களை இனி ஸ்ரீநகர மக்கள் கண்டு ரசிக்கலாம்.

500 பேர் அமரக்கூடிய மூன்று பெரிய திரையரங்குகள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்டுவதற்கு காஷ்மீரின் மரபான கைவினைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்படம் பார்க்க வருவோருக்கு உணவகம் போன்ற வசதிகளும் செய்யப்படுகின்றன. ஜம்மு காஷ்மீரில் 1990 ஆரம்பத்திலேயே திரையரங்குகள் தீவிரவாத அச்சத்தால் மூடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments