நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.
சேலத்தில் இருந்து நேற்றிரவு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டாரஸ் லாரி பேருந்து மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேரும், ஆம்னி பேருந்தின் கிளீனர் என 6 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments