தேர்வுக்கு செல்வது தொடர்பாக தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

0 1954

சென்னையில் தேர்வுக்கு செல்வது தொடர்பாக தாயிடம் சண்டையிட்ட 11ஆம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தியாகராயர் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சுமி என்பவர் கணவரை பிரிந்து தனது 15 வயது மகன் ஹரிசுடன் வசித்து வந்தார்.

காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்பிப்பிய சுமி, காலாண்டுத் தேர்வுக்கு செல்வதற்கு தாமதமனதாகக்கூறி மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, பரீட்சைக்கு செல்ல மாட்டேன் என சண்டையிட்டதாக சொல்லப்படும் நிலையில், அவர் திடீரென 3ஆவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்துள்ளார்.

இதில், படுகாயமடைந்த ஹரீஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments