விழுப்புரத்தில் கைவினை பொருட்கள் விற்பனை கடையில் இருந்த 7 பழங்கால சிலைகள் மீட்பு..!

0 1837
விழுப்புரத்தில் கைவினை பொருட்கள் விற்பனை கடையில் இருந்த 7 பழங்கால சிலைகள் மீட்பு..!

விழுப்புரம் பொம்மையார்பாளையத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பின்புறமுள்ள தோட்டத்தில், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 7 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த கடையில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய, பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அர்தநாரீஸ்வரர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, கிருஷ்ணன் சிலை, புத்தர் சிலை, மயில் வாகனம் சிலை உள்ளிட்ட 7 பழங்கால உலோக சிலைகளை கைப்பற்றி கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments