கப்பலில் கடத்தி வரப்பட்ட 5 டன் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.!

0 2955

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின், பெல்ஜியம் நாடுகளுக்கு கப்பல் வழியே கடத்தப்பட இருந்த 5 டன் கொக்கைன் மூலப்பொருளை கொலம்பியா போலீசார் பறிமுதல் செய்தனர்.

பாரன்குவிலா மற்றும் சான்டா மார்ட்டா துறைமுகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5 டன்னுக்கும் அதிகமான கொக்கைன் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடைய சர்வதேச கடத்தல் மாபியா குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments