ஆன்லைன் பகுதிநேர வேலைவாய்ப்பு.. மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை.!

0 2831

சிறிய முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாக ஆசைக்காட்டி அதிக பணத்தை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றும் போலியான இணையதளத்தில் தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வேலூரை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆன்லைன் பகுதிநேர வேலை மூலம் அதிக பணம் பெறலாம் எனக்கூறி, போலியான இணையதள பரிவர்த்தனை மூலம் நூதன முறையில் 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று மர்மநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

போலியான இணையதளத்தில் நேரடியாக பணம் கட்டினால், அதன் வங்கி கணக்குகளை கண்டறிவது மிக கடினம் என்று தெரிவிக்கும் காவல்துறையினர், ஆன்லைன் பணமோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments