திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த தேவஸ்தான ஊழியர் கைது.!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடி ரூபாய் மோசடி செய்த தேவஸ்தான ஊழியர் கைது செய்யப்பட்டார்.
திருப்பதி தேவஸ்தானத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் பாலகிருஷ்ணன், பல்வேறு நபர்களிடம் கோவிலில் வேலை வாங்கி தருவதாக கூறி போலியான ஆவணங்களை தயார் செய்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணனை போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து போலியான தேவஸ்தான விஜிலன்ஸ் முத்திரை,எம்.பி யின் கார் ஸ்டிக்கர் உள்ளிடவை அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
Comments