பெங்களூருவில் விமான சேவையை விட Uber டாக்சி சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் வேதனை.!

0 2060

பெங்களூருவில் விமான சேவையை விட Uber டாக்சி சவாரிக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெங்களூருவிலிருந்து மும்பை செல்லும் விமான டிக்கெட் 2,058 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பெங்களூருவில் உள்ள தனது வீட்டிலிருந்து 6 பேர் பயணிக்கக்கூடிய Uber டாக்சியில் விமான நிலையம் செல்ல 2,600 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக Ken Web வணிக செய்தி இணையதளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தர்மகுமார், டுவிட்டரில் Screen shot உடன் பதிவிட்டுள்ளார்.

ஒன்றரை மணி நேர விமானப்பயணத்தை விட ஒரு மணி நேர டாக்சி பயணத்திற்கு 130 சதவீதம் அதிக கட்டணம் செலுத்தவேண்டியுள்ளதாக பெங்களூரு வாசிகள் குமுறுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments