கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் கைது.!

0 2096

சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடவிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments