அறிவியல் ஆசிரியர் கண்டித்ததால் ஆத்திரம்.. அரசு பள்ளி சாவி கொத்தை லாவகமாக திருடி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட 11-ம் வகுப்பு மாணவர்கள்..!

0 2215
அறிவியல் ஆசிரியர் கண்டித்ததால் ஆத்திரம்.. அரசு பள்ளி சாவி கொத்தை லாவகமாக திருடி போலீசாரிடம் மாட்டிக்கொண்ட 11-ம் வகுப்பு மாணவர்கள்..!

திருவிதாங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர் ஓய்வறையில் வைக்கப்பட்டிருந்த சாவிக்கொத்து மாயமானதால் காலை வகுப்பறைகளை திறக்க முடியாமல்போனது.

அங்கு பொருத்தப்பட்டிருந்த 5 சிசிடிவி கேமராக்களும் அடித்து உடைக்கப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதே பள்ளியில் +1 படிக்கும் மாணவர்கள் 7 பேர் ஆசிரியர் ஓய்வறைக்குள் புகுந்து சாவிக்கொத்தை திருடிச்சென்றதும், சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கியதும் தெரியவந்தது.

அறிவியல் ஆசிரியர் கண்டித்ததால் மாணவர்கள் இவ்வாறு செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments