மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம்.!

0 1905

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ள திமுக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். சீசன் பறவை போல் ஒவ்வொரு கட்சியாக தாவுபவர் பண்ருட்டி இராமச்சந்திரன் என்றும் அவர் விமர்சித்தார்.

 

இதேபோல், கோவை தெற்கு தாலுக்கா தாசில்தார் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகே நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். 

 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சியில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

 

இதேபோல், உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

சென்னை பட்டாளத்தில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments