ஆவின் தயாரிப்பு பொருள்களின் விலை இன்று முதல் உயர்வு

ஆவின் தயாரிப்பு இனிப்புவகைகளின் விலை இன்று முதல் உயர்ந்துள்ளது.
125 கிராம் குலோப் ஜாமுன் 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், 250 கிராம் குலோப் ஜாமுன் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், 100 கிராம் ரசகுல்லா 40 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், 200 கிராம் ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
250 கிராம் மைசூர் பாகு 120 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும், 500 கிராம் மைசூர் பாகு 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. 250 கிராம் பிரிமியம் மில்க் கேக்கின் விலை 100 ரூபாயிலிருந்து 120 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மில்க் பேடா, கோவா, டேட்ஸ் கோவா, ஸ்வீட்லெஸ் கோவா ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments