தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி.. சென்னை ஐஐடி விடுதியில் ஒடிசா மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

0 2454

சென்னை ஐஐடி விடுதியில் தங்கி படித்து வந்த ஒடிசா மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒடிசாவைச் சேர்ந்த  சுப்ரான்ஷு சேகர் தெவூரி கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடி விடுதியில் தங்கி  பி.டெக் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் 4ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். செமஸ்டர் தேர்வில் அவர் ஐந்து அரியர்ஸ் வைத்துள்ளதாகவும் தேர்வில் தோல்வியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சுப்ரான்ஷு, தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments