ஓடிசாவில் கொலை செய்து விட்டு சேலத்தில் பதுங்கி இருந்த 4 பேர் கைது!

0 3552

ஒடிசாவில் கொலை செய்து விட்டு சேலத்தில் தலைமறைவாக பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த பலராம் டகுவா, லஷ்மண் பத்ரா, சுனில் பத்ரா மற்றும் ஹிதியா சிகி ஆகியோர் மீது கட்டாக் மற்றும் கஞ்சம் மாவட்டங்களில் பல்வேறு திருட்டு, கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 4 பேரும் கொண்டலாம்பட்டி புத்தூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து ஒடிசா போலீசார் சேலம் போலீசார் உதவியுடன் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் பலராம் டகுவா ஒடிசா வீட்டில் 4 துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments