எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் - கட்டிடத்தின் மேலாளர் உட்பட 4 பேர் கைது..!

0 2703
எலக்ட்ரிக் பைக் ஷோரூம் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் - கட்டிடத்தின் மேலாளர் உட்பட 4 பேர் கைது..!

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு ஷோரூமில் பற்றிய தீ மேல் தளத்தில் இருக்கும் ஓட்டலுக்கு பரவியதில், தீயில் சிக்கியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.

தரைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்குகள் நெடு நேரம் சார்ஜ் போட்டபடி இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில், கட்டிடத்தின் மேலாளர், ஓட்டல் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments