டைல்ஸ் ஏற்றி வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்.. உடனடியாக காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பிய 3 பேர்..!

0 1866
டைல்ஸ் ஏற்றி வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்.. உடனடியாக காரை விட்டு இறங்கியதால் உயிர் தப்பிய 3 பேர்..!

கும்பகோணம் அருகே மாருதி ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமானைச் சேர்ந்த ராஜ்மோகன், தனது வீட்டில் நடைபெறும் கட்டுமான பணிக்காக டைல்ஸ் கற்களை வாங்கிக் கொண்டு ஆம்னி காரில் உறவினர்கள் 2 பேருடன் காரில் திரும்பியுள்ளார்.

தாராசுரம் மெயின் ரோட்டில் கார் வந்தபோது திடீரென என்ஜினில் இருந்து புகை வந்ததும் 3 பேரும் உடனடியாக இறங்கிய சில வினாடிகளில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது.

தகவலின்பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை கட்டுப்படுத்துவதற்குள் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments