கன்னியாகுமரியில் திருமணமாகி 25 நாட்களே ஆன இராணுவ வீரர் மாரடைப்பால் மரணம்..!

0 2289
கன்னியாகுமரியில் திருமணமாகி 25 நாட்களே ஆன இராணுவ வீரர் மாரடைப்பால் மரணம்..!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் திருமணமான 25 வது நாளில் இராணுவ வீரர் நெஞ்சுவலியால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதயமார்த்தாண்டம் பிச்சவிளை பகுதியை சேர்ந்த 32 வயதான சரவணன், இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஜம்முகாஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில், திருமணத்திற்காக ஒரு மாத விடுப்பில் இங்கு வந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திருமணமான நிலையில், மீண்டும் நாளை பணிக்கு திரும்ப இருந்த நிலையில் இன்று காலை சரவணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சரவணன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments