திருமணமான 9-வது நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. மயானத்திலிருந்து சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை..!

0 2352
திருமணமான 9-வது நாளில் புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.. மயானத்திலிருந்து சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை..!

எடப்பாடி அருகே தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் மயானத்தில் தகனம் செய்ய முயன்றபோது போலீசார் அதிரடியாக மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூர் விமலா தேவிக்கும், நல்லங்கியூர் ஜீவானந்தத்திற்கும் கடந்த 5-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் விமலாதேவி சம்பவத்தன்று நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவசரமாக பெண்ணின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்ற நிலையில், தகவலறிந்த போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையா? தற்கொலையா? என விசாரணை நடந்து வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments