காட்டு யானை தாக்கியதில் லாரி டிரைவர் உயிரிழப்பு

0 1723

ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் அருகே காட்டு யானை தாக்கியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.

அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கோவில் வளாகத்தில் உலவிக் கொண்டிருந்தது. அங்கிருந்த வனத்துறையினரும், லாரி டிரைவர்களும் சத்தம் போட்டு யானையை விரட்ட முற்பட்ட நிலையில், ஆவேசமடைந்த காட்டு யானை துரத்தத் தொடங்கியதால், அவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த லாரி டிரைவர் சீனிவாசனை யானை துரத்தி தும்பிக்கையில் பிடித்து காலால் மிதித்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments