நகர்மன்றத் தலைவரை கொல்ல அரிவாளுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபரால் பரபரப்பு

0 1580

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர்மன்றத் தலைவரை கொல்ல அரிவாளுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலை காவல் நிலையத்திற்கு அரிவாளுடன் வந்த நபரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்ததில், உடுமலையை சேர்ந்த சேக்தாவூத் என்பதும், நகர்மன்றத் தலைவரான மத்தீன் என்பவரை கொல்ல 5 பேர் கொண்ட கும்பல் வேனில் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தான்.

இதையடுத்து, காவல்துறை சார்பில் மத்தீன்-க்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ரோந்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. அரசியல் முன்பகையா அல்லது மனநிலை சரியில்லாதவரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments