4 இருக்கைகளுடன் 4 கதவுகளை கொண்ட அதிநவீன காரை அறிமுகப்படுத்தியது ஃபெராரி கார் நிறுவனம்

0 5562
4 இருக்கைகளுடன் 4 கதவுகளை கொண்ட அதிநவீன காரை அறிமுகப்படுத்தியது ஃபெராரி கார் நிறுவனம்

விலை உயர்ந்த பந்தயகார்கள் உற்பத்தியில் தலைசிறந்து விளங்கும் இத்தாலியின் ஃபெராரி கார் நிறுவனம் தனது முதல் 4 இருக்கைகளுடன் 4 கதவுகளை கொண்ட அதிநவீன காரை அறிமுகப்படுத்துகிறது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ப்யூரோசேங் என்ற பெயருடைய இந்த கார் , சக்திவாய்ந்த V12 என்ஜினுடன், 715 குதிரை திறன் வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. வெறும் 3.3 விநாடிகளில் இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

4 வீல் ட்ரைவ் உடன் அறிமுகமாகும் இந்த கார் 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும், இந்த காரின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 3 கோடியே 17 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments