கோவாவில் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் உள்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

0 2559
கோவாவில் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் உள்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்

கோவாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத், எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

முதலமைச்சர் பிரமோத் சாவந்தை நேரில் சந்தித்து,தங்களை அவர்கள் பாஜகவில் இணைத்து கொண்டனர். 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டப்பேரவையில் பாஜக கூட்டணிக்கு 25 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைந்ததால் அவர்களின் பலம் 33ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 11ஆக இருந்த காங்கிரஸ் பலம், 3ஆக குறைந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments