கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை.. இளைஞர்களை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்..!

கன்னியாகுமரியில் கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த 3 இளைஞர்களை சுற்றிவளைத்த போலீசார் 2 கிலோ கொக்கைன், 1 கிலோ கஞ்சா 25 ஆயிரம் ரூபாய் பணம், 5 செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இரனியல் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் போதை பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த ஆம்பூர் அசாருதீன், கபின், நரேன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்
Comments