வானில் வரிசையாக ரயில் போல காட்சியளித்த ஒளிப்புள்ளிகள்.. வியந்த பொதுமக்கள்.!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வானத்தில் தோன்றிய விசித்திர காட்சி பலரை வியப்பில் ஆழ்த்தியது.
ஒளி விளக்குகளை வரிசையாக அடுக்கியது போல நட்சத்திரப் புள்ளிகள் காட்சியளித்தன. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு அறிவியல் புனைப்பெயர்களையும் திரைப்படப் பெயர்களையும் சூடி மகிழ்ந்தனர்.
திங்கட்கிழமை இரவு வானில் ஒரு ரயிலின் பெட்டிகள் வரிசையாக நகர்வது போல வானத்தில் வெண்புள்ளிகள் போல நட்சத்திரங்கள் நகர்ந்து சென்றதை பல மாவட்டங்களில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
முன்பு இது போல் உத்தரப்பிரதேசத்திலும் பஞ்சாபிலும் ஒளிப்புள்ளிகள் தோன்றிய போது அவை விண்ணில் செலுத்தப்பட்ட 35 வகை செயற்கைக்கோள்களின் வரிசை என்று விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர். ஆயினும் இந்த முறை அத்தகையை விளக்கம் தரப்படவில்லை.
Comments