பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெற்ற பாம்பு மனிதர் நாகப்பாம்பு கடித்ததில் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.!

ராஜஸ்தானில் 20 ஆண்டுகளாக பாம்பு பிடிப்பதில் பிரசித்தி பெற்ற பாம்பு மனிதர் நாகப்பாம்பு கடித்ததில் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
இந்த பரிதாபகரமான காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. வினோத் திவாரி என்ற 45 வயது மனிதர் Churu மாவட்டத்தில் பல ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
சனிக்கிழமை அன்று ஒரு நாகப்பாம்பு படமெடுத்து நின்ற நிலையில் அதனை உதவியாளருடன் பிடித்து பையில் போட முயன்ற போது அந்த விஷப்பாம்பு அவர் விரலைக் கடித்து விட்டது. இதையடுத்து மயக்கம் வந்து சில நிமிடங்களில் அவர் உயிரிழந்து விட்டார்.
Comments