மும்பை To அகமதாபாத் 3 வது வந்தே பாரத் ரயில் செப்.30 தொடக்கம்.!

0 2266

அதிநவீன வந்தே பாரதம் மூன்றாவது ரயிலை பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயிலில் பல்வேறு புதிய வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு இந்த ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அதிக வேகமாக செல்லும் இந்த ரயிலில் 32 அங்குல தொலைக்காட்சிகள், கொடிய வைரஸ் நுண்கிருமிகளை அகற்றும் அல்ட்ரா வயலட் காற்று சுத்திகரிப்பு சாதனங்கள்,வை-ஃபை ,  போன்ற பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

சோதனை ஓட்டம் நடைபெற்று, வர்த்தக ரீதியாக ரயிலை இயக்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments