மகன் திட்டியதால் மனமுடைந்த தாய் உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை..!

0 2608
மகன் திட்டியதால் மனமுடைந்த தாய் உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை..!

மகன் திட்டியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தாய் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, காசிமேடு பவர்குப்பத்தைச் சேர்ந்த இந்திரா கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீவைத்துக் கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவனையில் அனுமதித்தனர்.

70 சதவீத தீக்காயங்களுடன் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணி சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

இதுகுறித்து போலீசாரின் விசாரணையில் குடும்ப பிரச்சனையில் மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments