வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர் மர்ம மரணம்.. உடலை மீட்டுத் தர கோரி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை..!

0 3587
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவர் மர்ம மரணம்.. உடலை மீட்டுத் தர கோரி மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை..!

வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக்கோரி மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.

திருச்சி, வடக்கு சித்தாம்பூர் பகுதியை சேர்ந்த சின்னமுத்து நான்கு மாதங்களுக்கு முன்பு சவுதிக்கு வெல்டர் வேலைக்காக சென்றார்.

கடந்த புதன்கிழமை மனைவி அன்னக்கிளி, மகளுடன் செல்போனில் பேசிய சின்னமுத்துவின் செல்போன் மறுநாள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அவரது நண்பரின் செல்போனில் அன்னக்கிளி பேசியபோது சின்னமுத்து காணவில்லை எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் சின்னமுத்துவை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக அன்னக்கிளியிடம் கூறிய நண்பர், மீண்டும் தொடர்புகொண்டு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி கணவரின் உடலை மீட்டுத்தர திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அன்னக்கிளி கோரிக்கை மனு அளித்தார்.

சவுதி தமிழ்சங்கங்கள் மூலம் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments